2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கைக்குண்டு வீச்சு தாக்குதல்

Kogilavani   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அஷ்ரப்கான், எம்.எஸ்.எம்.ஹனீபா


சாய்ந்தமருது அல்-ஹிலால் தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம்; மாணவர் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் சாய்ந்தருது முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் உதவி செயலாளருமான வீ.எம்.ஆஷிக் என்பவரின் வீட்டுக்கு, இன்று அதிகாலை 5.45 மணியளவில் சிறியரக கைக்குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.


இத்தாக்குதல் மேற்கொண்ட சமயம் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்; எதுவித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.


இத்தாக்குதலில் வீட்டின் முன்புறக் கதவுகள் மற்றும் வீட்டுத் தளபாடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X