2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அரச அதிகாரிகள் தமது கடமைகளிலிருந்து விலகியவர்களாக செயற்படக்கூடாது: நஸீர்

Sudharshini   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அரச அதிகாரிகள் தமது கடமைப் பொறுப்புகளிலிருந்து விலகியவர்களாக ஒரு போதும் செயற்படக்கூடாது. மக்களின் பணிகளை இலகுப்படுத்துவதற்காகவே அரசாங்கம் அரச அதிகாரிகளை நியமித்து சேவை வழங்குவதற்கான அதிக வசதி வாய்ப்புக்களையும் செய்து வருகின்றதென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.


அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் நடமாடும் சேவை, அட்டாளைச்சேனை அந்-நூர் வித்தியாலத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,


கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவில் சற்று இடைவெளியான நிலைமை காணப்பட்டது. அந்த நிலைமைகள் இன்று மாறிவருகின்றது. பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமான உறவைப் மேலும் பலப்படுத்துவதன் மூலம்  குற்றச் செயல்களை பாரியளவில் குறைத்துக் கொள்ள முடியும்.


பொதுமக்களுக்கு பொலிஸார் மீதுள்ள அச்சம், சந்தேகமான நிலமைகள் மாறி நட்புறவை கட்டியெழுப்புவதுக்கான சந்தர்ப்பமாக இவ்வாறான மக்கள் நடமாடும் சேவைள் அமையும் என்பதில் ஐயமில்லை.


இவ்வாறான பல வேலைத்திட்டங்கள் மூலம் கடந்த யுத்தகால சூழ்நிலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் காணாமல் போன பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், பொலிஸ் முறைப்பாடுகள் மற்றும் தீர்வெட்டப்படாத பல விடயங்களுக்கு; மக்கள் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.


இன்றய நவீன உலகில் காலம் மிகவும் அருமையாகவும், பெறுமதிமிக்கவையாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் அதிகாரிகளின் உதவிகளை தேடிவரும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை காலத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் அதிகாரிகள் உரிய தீர்வினை வழங்குவதற்கு சித்தமானவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் அர்பணிப்புடன் சேவை வழங்குபவாகளாகவும் இருக்க வேண்டும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X