2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வாழைச்சேனை ஆதாரா வைத்தியசாலை புறக்கணிக்கப்படுகின்றது: அமிர் அலி

Gavitha   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கிழக்கு மாகாண சபையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதால், இதனை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு வெள்ளிக்கிழமை (20) விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வைத்தியசாலையின் நிருவாகத்துடன் வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை நிறைந்து காணப்படுகின்றது. இந்த வைத்தியசாலையின் தேவைகளை பார்க்கின்ற போது, மிகவும் வேதனை தருகின்றது.

கல்குடாத் தொகுதியில் உள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சேவை வழங்கக்கூடிய ஒரு பிரதான வைத்தியசாலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

கிழக்கு மாகாண சபை நிருவாகத்தின் கீழ் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை. கடந்த காலங்களில் இதற்குரிய வளப்பங்கீடுகள் சரியான முறையில் வளங்கப்படவில்லை என்ற காரணத்தினால் வைத்தியசாலையில் இருக்கின்ற அனைவரும் ஒட்டு மொத்த கருத்தோடு இருக்கின்றார்கள்.

இந்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் நிருவாகத்துடன் இணைப்பதால் தங்களது வைத்தியசாலையின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கருதுவதால், எதிர்காலத்தில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவந்து அபிவிருத்தி செய்வதற்கான முனைப்புக்களை செய்யவுள்ளோம்.

இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் பிரதேச மக்களுடைய ஒத்தாசைகளையும் எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சனாமூர்த்தி, சத்திரசிகிச்சை நிபுணர் எஸ்.சகிஸ்வரன், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் எஸ்.பிரோமினி, வைத்திய அதிகாரிகளான எம்.பி.எம்.காலித், எம்.எச்.எம்.ஜெஸீர்,  நிருவாக உத்தியோகஸ்தர் எச்.எம்.எம்.பாறூக் மற்றும் தாதி உத்தியோகஸ்தர்கள் சுகாதார சேகைள் உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X