Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
சுகாதார இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ.ஹசன் அலியை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கௌரவிக்ககும் நிகழ்வு திங்கட்கிழமை(22) காலை 9 மணிக்கு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
புதிய அரசாங்கத்தில் சுகாதார இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹசன் அலி நியமிக்கப்பட்டதன் பின்னர் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு முதற்தடவையாக விஜயம் செய்யவுள்ள அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்படவுள்ளதாக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபைச் செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்தார்.
இவ் விஜயத்தின் போது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள், வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வைத்தியசாலையினை தரமுயர்த்தல் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலை அபிவிருத்திச் சபைச் செயலாளர் றியாத் ஏ.மஜீத் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வுக்கான முன்னெடுப்புகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் மேற்கொண்டுள்ளார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago