2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று நகரிலிருந்து காரைதீவு சந்தியூடாக அம்பாறை நகருக்கு நேரடி பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களிலிருந்து அம்பாறை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலை, தென்கிழக்கு பல்கலைக்கழகம், தொழில் நுட்பக் கல்லூரி, அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் அரச நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள் உட்பட நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரயாணிகள் இவ்விழியில் பயணிக்கின்றனர்.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனைக்கு வரும் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் இவர்கள் அம்பாறைக்குச் செல்வதற்கு காரைதீவு சந்தியில் இறங்கி இரண்டு பஸ்கள் மாறி தமது பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இதனால் வீண் பண விரயம் ஏற்படுவதோடு உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று நகரிலிருந்து காரைதீவு ஊடாக பஸ் சேவையினை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X