2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கான கட்டடத்தொகுதி திறப்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 22 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அம்பாறை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரத்த வங்கிப்பிரிவுக்கான கட்;;டடத்தொகுதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 10.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் கௌரவ அதிதியாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன், சுகாதார அமைச்சின் இரத்தவங்கிப்பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அணில் முனசிங்க ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் இந்த விஜயத்தின் போது, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு, மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சகிதம் விஜயம் செய்து, அங்கு காணப்படுகின்ற குறைகள் மற்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.அப்துல் வாசித், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், வைத்தியசாலையின் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X