2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காணாமல் போன சிறுவன் மீட்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்


அம்பாறை, அக்கரைப்பற்று 6ஆம் பிரிவில் காணாமல் போனதாக கூறப்படும் சப்றின் எனும் 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 11 மணியளவில் பாலமுனையிலிருந்து மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,


மேற்படி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை(22) தனது வீட்டுக்கு அருகில் விளையாடிகொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார்.


சிறுவனை காணாவில்லை என அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் அறிவிக்கப்பட்டதுடன் அக்கறைப்பற்று பொலிஸிலும் முறையிடப்பட்டது. சிறுவனை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில், சிறுவன் ஒருவன் பாலமுனை பிரதான வீதியிலுள்ள தேனீர் கடைக்கு அருகில், நள்ளிரவு வேளையில் தனியாக உலாவிக் கொண்டிருப்பதாக அப்பிரதேச மக்கள் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.


ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் அச்சிறுவனை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதுடன் விசாரணையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X