2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறுகோரி நாளை ஆர்ப்பாட்டப்பேரணி

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 23 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

திவிநெகும உத்தியோகஸ்தர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரி கம்பஹா நகரப்பகுதியில் செவ்வாய்கிழமை (24) ஆர்ப்பாட்டப்பேரணி நடைபெறவுள்ளது.

நாளைய தினம் கம்பஹாவிலும் நாளை மறுதினம் காலியிலும் சனிக்கிழமை (28) பதுளையிலும் இவ் ஆர்ப்பாட்டப்பேரணி இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை திவிநெகும உத்தியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கித்சிறி கமகே தெரிவித்தார்.

ஏற்கெனவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்ற போதும் இதுவரையில் உரிய பதில் கிடைக்காமை காரணமாகவே இந்த ஆர்ப்பாட்டப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முறையற்ற விதத்தில் அவசரமாக மேற்கொள்ளப்படும் இந்த இடமாற்றம் அரசியல் பழிவாங்கல் போல் அமைவதாக திவிநெகும உத்தியோகஸ்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் அரச உத்தியோகஸ்தர்களுக்கான மோட்டார்சைக்கிள்கள் வழங்கப்பட்ட போதும் அம்பாறை மாவட்டத்தில் சென்ற வருடம் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன் பணத்தை செலுத்திய அனைத்து பெண் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட குறித்த சில பிரதேச செயலகங்களின் திவிநெகும உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் இதுவரை வழங்கப்படாமையிட்டு பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர் பலர் விசனம் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X