Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவிவரும் பௌதீக வள பற்றாக்குறைகளை, அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டம், மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எல்.அமாமுதீன் தலைமையில் திங்கட்கிழமை(23) வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'கடந்த அரசாங்கத்தினால் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்ட பின் தங்கிய கிராமங்கள் நல்லாட்சிக்கான இவ்வரசாங்கத்தினால் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களிடம் கேட்டுள்ளார்.
அதற்கிணங்க நான், அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு, நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை 100 நாள் அபிவிருத்தி திட்டத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளேன்.
ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக ஆண் நோயாளர் விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு என்பவற்றை நிர்மாணிக்கவுள்ளேன். அத்துடன் இவ் வைத்தியசாலையில் நிலவும் அத்தியவசிய தேவைகளை நிறைவு செய்வதற்கும் ஆவண செய்வேன்' என்றார்.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், கல்முனை பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் உட்பட அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago