2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

பொத்துவில், தகரம்பல காட்டுப் பகுதியில் சனிக்கிழமை(21) காணாமல் போனதாக கூறப்படும் ஒருவர் நேற்று திங்கட்கிழமை(23) மாலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.   


அட்டாளைச்சேனை 2ஆம் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய  நபரே  இவ்வாறு காணாமல் போய் மீண்டுள்ளார்.


கடந்த  சனிக்கிழமை (21) தகரம்பல வயல் பகுதிக்குச் சென்ற இவர் காணாமல் போயுள்ளார்.


இவரை பொத்துவில் பொலிஸாருடன் இணைந்து அவரது உறவினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் தேடும் பணியில்  ஈடுபட்டனர்.


இந்நிலையில் மேற்படி நபர், நேற்று திங்கட்கிழமை(23) மாலை,  உடும்பங்குளம் காட்டுப்பகுதியிலிருந்து இவர் மீட்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X