2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சுகாதார இராஜாங்க அமைச்சரின் அம்பாறைக்கான விஜயம்

Gavitha   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, திங்கட்கிழமை (23)  அம்பாறை மாவட்ட வைத்தியாலைகளின் விஜயத்தின் போது, 100 வருடம் பழமைவாய்ந்த அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலைக்கும் சமூகமளித்தார்.

இங்கு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.ரி.ஜாரியாவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர், வைத்தியசாலையின் குறைபாடுகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, வைத்தியசாலையின் வைத்தியர்களால் அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னத்தினையும் வழங்கி வைத்தனர்.

மேலும் அமைச்சரினால் இரண்டு இலட்சம் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வைத்திய அதிகாரி எம்.ரி.ஜாரியாவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் உத்தியோஸ்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உத்தியோகஸ்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X