2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சமூகம் சார் விடயங்களிலும் மாணவர்கள் முன்னின்று செயற்படுவது பாரட்டுக்குரிய விடயம்: அனோமா

Sudharshini   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கல்வியில் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த அபிவிருத்தி செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்படுவது பாராட்டுக்குரிய விடயம் என நீர்ப்பாசன, விவசாய பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் பெண்களின் சிறு கைத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் பயிற்சிப் பட்டறை இன்று புதன்கிழமை(25), ஒலுவில் பல்கலைக்கழக வளாகத்தில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

ஒரு நாட்டின் தேசிய உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. பெண்கள் யாரிலும் தங்கி வாழாமல் சுய தொழிலை மேற்க்கொள்வதன் மூலம் குடும்ப வாழ்க்கையை எவ்வித பிரச்சினையுமின்றி கொண்டு செல்ல முடியும்.

எமது நாட்டை பொறுத்தவரை வீடுகளில் பெண்கள் எவ்வித வேலையுமில்லாமல் இருக்கின்றார்கள். இதனால் அக்குடும்பத்தில் பொருளாதார ரீதியில் பெரும் பிரச்சனைகைள் ஏற்படுவதை காணக் கூடியதாகவுள்ளது. சிறு முதலீடுகளை கொண்டு சிறு சிறு கைத்தொழில்களை ஆரம்பிக்க முடியும்.

வெளிநாடுகளில் பெண்கள் சுயமாக சிறு கைத்தொழிலை ஆரம்பித்து அதனால் கூடுதலான வருமானத்தை பெறுகின்றார்கள். அதேபோன்று எமது நாட்டு பெண்களும் சுய தொழிலை ஆரம்பித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேணடும்.

காலத்துக்கு ஏற்ற இவ்வாறான நல்ல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினருக்கு எமது பாராட்டுகளை  தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம். முகம்மது இஸ்மாயில் தலைமையில்; நடைபெற்ற இந்நிகழ்வில், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X