Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
நல்லாட்சியை ஏற்படுத்தும் வகையில் துறைசார் ஆணைக்குழுக்களை அமைப்பதுக்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்துவருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார்.
அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச வைத்தியசாலைகளுக்கான விஜயத்தினை செவ்வாய்க்கிழமை(24) மேற்கொண்டிருந்தார். இதன்போது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
ஆட்சி மாற்றத்தின் தேவை உணர்ந்து, முக்கியமாக சிறுபான்மை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்தமைக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நாட்டில் புரையோடிக்கிடந்த ஊழல் மோசடிகள், போதைப்பொருள் பாவனைகள் மற்றும் பல குற்றச் செயல்களை இல்லாதொழிப்பதுக்கும் நேர்மையான நிரூவாக கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் ஆணைக்குளுக்கள் கொண்டுவரப்படவுள்ளன.
மேலும், அரசியல் யாப்பு மாற்றங்கள், சீர்தித்தங்கள், தேர்தல் முறைகள், ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் தொடர்பிலான மாற்றங்களையும் நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதுக்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 80 மில்லியன் ரூபாய் நிதியினை 100 நாட்கள் வேலைத்திட்டத்தை துரிதமாக முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதார இராஜங்க அமைச்சர் இதன்போது வேண்;டுகோள் விடுத்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.எல்.எம்.ஹனீபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago