2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சுகாதார இராஜாங்க அமைச்சர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு விஜயம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 25 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் நேற்று (24); விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரினாலும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸினாலும் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி, பொன்னாடைபோர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தில் முதன்மையான வைத்தியசாலையாக திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பழீல்,   அட்டாளைச்சேனை பிரதேச உறுப்பினர் எம்.எல்.கலீல், கோணாவத்தை ஜூம் ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.அமீன், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X