2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவருக்கு பிணை

Gavitha   / 2015 பெப்ரவரி 25 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்ட காலமாக நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் இருந்த சிலிங்கோனா பிரபிட் செயாரிங் தனியார் முதலீட்டு வங்கியின் தவிசாளர் ஜீவக லலீத் கொத்தலாவை, 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு  அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வாடிக்கையாளர்கள், குறித்த வங்கியில் வைப்புச் செய்த நிதியயை செலுத்தாதனால், பாதிக்கபட்ட வாடிக்கையாளர்கள் இவர் மீது நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், நீண்ட காலமாக இருந்த தவிசாளர் ஜீவக லலீத் கொத்தலாவ இன்று (25) தனது சட்டத்தரணிகளுடன் ஆஜரானார்.

இவரின் உடல் நிலையை கருத்தில் கொண்ட அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இவ்வழக்கை எதிர்வரும் ஜீன் மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X