Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
'முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைவருக்கும் எதிராக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் வியாழக்கிழமை (26) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கட்சியின் சிரேஷ்ட போராளிகள் என்ற பெயரில் அனாமதைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதில் எந்தவித உண்மையும் இல்லை. இதனை கட்சிப் போராளிகளும் பொதுமக்களும் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. இது ஒரு சில அரசியல் வியாபாரிகளின் செயல்' என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் குழுவின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.பறகத்துல்லாஹ் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
'ஆள் அடையாளத்தை வெளிப்படுத்தாத கோழைத்தனமான சில விஷமிகள் கட்சித் தலைமைக்கு எதிராக நாளை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரி அம்பாறை மாவட்ட மக்களை கட்சிக்கு எதிராக திசைதிருப்ப முற்பட்டுள்ளனர். இதன்மூலம் மக்களை இச்சதிகாரர்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்க முயற்சிப்பதற்கான முதல் நாடகமே இவ்;ஹர்த்தால் நாடகமாகும்.
உண்மையில் இது மக்களை பிழையாக வழி நடத்தி அதன் மூலம் அரசியல் வளர்ச்சி காண நப்பாசைப்படும் அரசியல்வாதிகளின் செயற்பாடாகும்.
முஸ்லிம் காங்கிரஸிக்கு எதிரான கருத்துக்களை உடையவர்கள் மக்கள் மன்றத்தில் நேருக்கு நேராக நின்று விவாதிப்பதன் மூலம் தங்களின் கொள்கை விளக்கத்தை மேற்கொண்டு அவர்களின் அரசியல் உயர்ச்சி பற்றி சிந்திக்காமல் முஸ்லிம் காங்கிரஸை விமர்சிக்கும் செயலானது கண்டிக்கத்தக்க விடமாகும்.
இவ்வாறான திருட்டுப் புத்திகளைக் கையாண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு சேர்க்க நினைக்கும் அரசியல் அதிகார வெறியர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டக் காத்திருக்கிறார்கள் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் இந்த ஹர்த்தால் நடவடிக்கையை பயன்படுத்தி சிலர் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளுக்கு இதில் தொடர்புள்ளது என்ற வதந்தியையும் பரப்பி விட்டுள்ளனர்.
இதன் மூலம் இவர்களை கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கு எதிரானவர்கள் எனக்காட்டி கட்சியிலிருந்து பிரித்தெடுப்பதற்கும் தூரப்படுத்துவதற்கும் முயற்சிக்கின்றனர். இது அவர்களின் பகற்கனவாகும். இதில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்துள்ளனர். என்பதை இந்த அரசியல் வியாபாரிகள் புரிந்து கொள்ளவேண்டும்' எனவும் தெரிவித்தார்.
இவரின் கருத்து இவ்வாறு இருக்க அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிபுக்கான எந்த நடவடிக்கைகளையும் காண முடியவில்லை.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago