2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மழைக்காரணமாக அறுவடை பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை

Kogilavani   / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்


அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) முதல் பெய்து வருகின்ற மழையினால் பெரும் பாதிப்புக்கள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளதால் குறித்த பிரதேசங்களில் முடிவடையும் தறுவாயிலிருந்த வேளாண்மை அறுவடை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.


கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட பிரதேசங்களில் நெல் அறுவடை பாதிப்புககுள்ளாகியுள்ளது.


அரசு விவசாய திணைக்களங்களினூடாக உத்தரவாத விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து வரும் இச்சந்தர்ப்பத்தில் தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லை உலரவைத்து விற்பனை செய்வதற்கு  முடியாதுள்ளதால் விவசாயிகள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.


தற்போது பெய்துவரும் மழை இன்னும் தொடர்ந்து நீடிக்குமானால் விவசாயிகளினால் அறுவடை செய்யப்படும் நெல்லை உத்தரவாத விலைக்கு விற்கமுடியாத நிலை ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம் என்ற அச்சத்தில் விவசாயிகள் கவலையடைகின்றனர்.


தற்போது ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தினால் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக பாதிப்படைந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X