Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திம்ரிகொல்ல பிரதேசத்தின் 08 சங்கங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் புதன்கிழமை (25) வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண அமைச்சரின் நிதியொதுக்கீட்டில் மரண நலன்புரிச் சங்கம், மகளிர் சங்கம் மாதர் அபிவிருத்திச் சங்கங்கள்;, கிராமோதய சங்கம் போன்றனவற்றுக்கான பிளாஸ்டிக் கதிரைகள், விஹாரைக்கான ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட பொருட்கள், உபகரணங்கள் அமைச்சரினால் இதன்போது கையளித்து வைக்கப்பட்டன.
தமன பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின்தங்கிய திம்ரிகொல்ல கிராமமக்கள் அமைச்சரிடம் விடுத்த வேண்டுதலின் பேரிலேயே இப்பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், கிராமத்துக்கான மின்சார வசதி, பாதை அபிவிருத்தி, வாழ்வாதார உதவிகள் தொடர்பிலும் அமைச்சரிடம் இப்பிரதேச மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் முடியுமானவரை தாங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago