2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

குடிநீர் இணைப்பும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பும்

Kogilavani   / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பினட் (சிடா -ஸ்ரீலங்கா)வின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் 'வாழ்வின் ஒளி' வாழ்வாதார உதவிச் செயற்திட்டத்தின் 7வது அங்கத்தின் ஊடாக இலவச குடிநீர் இணைப்பும் கற்றல் உபகரணங்களும் (25)வழங்கி வைக்கப்பட்டது.


கல்முனையில் நடைபெற்ற  வாழ்வின் ஒளி வாழ்வாதார உதவித்திட்டத்தின் போது 18 பயனாளிகளுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான பத்திரங்களும் கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாதணிகள், புத்தகப் பைகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் என்பன வழங்கப்பட்டன.


மாகாண சபை உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கல்முனை மாநகர பிரதி மேயர் அப்துல் மஜீட், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X