Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 பெப்ரவரி 26 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஏ.தாஜகான்
கல்முனை மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர்,கடற்றொழில் பரிசோதகர்களின் செயற்பாட்டை கண்டித்து பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கரையோர மீனவர்கள் கடற்கரையில் இன்று வியாழக்கிழமை (26) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதிப்பத்திரமின்றி பொத்துவில் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதகாலமாக கரைவலை மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்காக கல்முனை மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர், கடற்றொழில் பரிசோதகர்கள், சுற்றி வளைப்பை மேற்கொண்டு கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை கைப்பற்ற எத்தணித்த பொழுதே குறித்த மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் சார்பாக மீனவர் எம்.எல். சஹாப்தீன் கருத்து தெரிவிக்கையில்,
சுமார் 30 வருடமாக கடற்றொழிலில் மீன்பிடித்து வந்த எம்மைத் தடுக்கின்ற பொழுது நாம் எங்கு செல்வது எமக்கு வேறு தொழில்களும் தெரியாது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை எப்படி ஓட்டுவது? இதற்கு அரசாங்கம் பதில் தர வேண்டும். திடீரென்று இன்று வருகை தந்த மீன்பிடி உத்தியோகத்தர்கள் எமது கரைவலையினைத்தடுத்து உபகரணங்களை அள்ளிச் செல்வததென்றால் நாளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அப்படியென்றால் நாங்கள் இந்த இடத்தில் உயிரை விடுகின்றோம். என்றார்.
கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட மீனவக்குடும்பத்தினர் அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது மாத்திரமன்றி பெற்றோல், மண்ணெண்ணைக் கலன்களுடனும். அங்கு தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago