2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தாய், சேய் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு

Gavitha   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

கல்பிட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திகழி பிரதேசத்தின் தாய் சேய் சிகிச்சை நிலையம், கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையின் புனரமைக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு என்பன வெள்ளிக்கிழமை (27)  திறந்து வைக்கப்பட்டன.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டிக்கு விஜயம் செய்த வடமேல் மாகாண சுகாதார, விளையாட்டுதுறை அமைச்சர் டி.பி. ஹேரத்தினால் இக்கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

திகழி தாய் சேய் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரினால் குறித்த கட்டடத்தில் கிழமைக்கு 2 நாட்கள் நிரந்தரமாக வைத்திய சிகிச்சை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை உடனடியாக ஏற்றுக்கொண்ட மாகாண அமைச்சர்,  முதற்கட்டமாக எதிர்வரும் செவ்வாய்கிழமை (03) முதல் கிழமையில் ஒரு நாள் சிகிச்சை வழங்கப்படுமென உறுதியளித்தார்

கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற அமைச்சர், வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன், நோயாளர்களிடமும் நலம் விசாரித்தார்.

இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, கல்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச். மின்ஹாஜ், அமைச்சின் மாகாண செயலாளர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X