2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் மழை ஓய்வடைந்ததால் அறுவடை ஆரம்பம்

Gavitha   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) முதல் பெய்து வந்த மழை வெள்ளிக்கிழமை (27) முதல் ஓய்ந்துள்ளதால் வேளாண்மை அறுவடை நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த மழையினால் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட பிரதேசங்களில் முடிவடையும் தறுவாயிலிருந்த நெல் அறுவடை முற்றாக பாதிப்புககுள்ளாகியிருந்தது.

குறித்த பிரதேசங்களில் தற்போது மழை ஓய்ந்து கடும் உஷ்னத்துடன் கூடிய வெயில் இறைப்பதால், அறுவடை நடவடிக்கைகள் மும்மரமாக இடம்பெற்று வருவதுடன் அறுவடை செய்யப்படும் நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

நேற்று முதல் இரண்டு நாட்களாக மழை ஓய்ந்துள்ளதால் தாங்கள் அறுவடை செய்த நெல்லினை உலரவைத்து அரசினால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலைக்கு விற்பனை செய்வதற்கான  கால நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி  தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X