2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் 47 சதவீதமானவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 01 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கேறஹ்மத்துல்லா, எஸ்.கார்திகேசு

கிழக்கு மாகாணத்தில் 47 சதவீதமான மாணவர்கள் க.பொ.த. சாதாரண பரீட்சையின் பின்னர் பாடசாலையிலிருந்து இடைவிலகிச் செல்வதாகவும் இந்த நிலைமை கல்வித்துறைக்கு ஆரோக்கியமானதாக அமையாது எனவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகே தெரிவித்தார்.

திருக்கோவில் கலாசார மத்திய நிலைய திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. இந்த விழாவில்; கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

'கடந்தகால செயற்பாடுகளின் காரணமாக தமிழ்ப் பிரதேசங்களின் கல்வி நிலை மிகவும் பின்தங்கிய நிலைமையிலிருந்தது. இந்த நிலைமையிலிருந்து  விடுபடுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். மேலும்,  அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்,  நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்;தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளார். இந்த நிலையில்,  எதிர்காலத்தில்; திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 20,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளமுடியும். விவசாய உற்பத்திகளை நியாயமான விலையில் கொள்வனவு செய்யவும் சந்தை வசதியை ஏற்படுத்தவும் ஜனாதிபதி திட்டங்களை வகுத்துள்ளார்.

அத்துடன், விவசாயத்துக்காக  பாவிக்கப்படும் இரசாயனப் பொருட்களுக்கான விலையை குறைத்து,  கூடியளவான இலாபம் கிடைப்பதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  விவசாயக் கடனுக்கான வட்டி வீதம் குறைப்பு, அத்தியவசிய பொருட்களின் விலைக் குறைப்பும் மக்களுக்கு ஆறுதலாக அமையும்.

கடந்த அரசாங்கம் கரையோரங்களிலுள்ள ஏழை மீனவர்களை விரட்டியடித்து இராணுவ முகாம்களையும் சுற்றுலா விடுதிகளையும் அமைத்துள்ளன. இதனால்,  அந்த மக்களின் நிலை படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X