2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சேவை நலன் பாராட்டி கௌரவிப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 02 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஹற்றன் நெஷனல் வங்கியில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி ஒய்வு பெற்றுச் செல்லும் ஏ.எஸ்.எம்.புகாரியின்  சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் விழா அக்கரைப்பற்று ஹற்றன் நெஷனல் வங்கியில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.

முகாமையாளர் ஏ.எல்.சிறாஜ் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் க.ஜெகராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது ஓய்வு பெற்றுச் செல்லும் புகாரிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் பணப் பொதியும் வழங்கி அதிதிகளினால் கௌரவம் அளிக்கப்பட்டது.

உதவி முகாமையாளர் ரீ.எஸ்.பிரியதர்ஸன், ஆர்.காயத்திரி, வங்கி அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X