Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மார்ச் 02 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
அம்பாறையில் மிகவும் பழமைவாய்ந்த பாடசாலையாகவுள்ள வீரமுனை இராமகிருஸ்ணமிஷன் பாடசாலையினை அனைத்துவிதங்களிலும் கட்டியெழுப்பவேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது என பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளரும் அம்பாறை மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தருமான என்.பிரதாப் தெரிவித்தார்.
வீரமுனை இராம கிருஷ்ணமிஷன் பாடசாலையின் பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (01) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் தெரிவு இடம்பெற்றது. புதிய தலைவராக எஸ்.மகேஸ்வரன், செயலாளராக என்.பிரதாப், பொருளாளராக சு.தயாபரன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
எமது பாடசாலையின் பொற்காலம் அமரர் இராஜேந்திரா அதிபர் இருந்த காலமாகும். அன்றைய காலத்தில் எமது பாடசாலை பல வழிகளிலும் வளர்ச்சியடைந்தது.
அன்று கல்விப்பணியுடன் மட்டும் நின்றுவிடாது சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல முன்னெடுப்புகள் அவரினால் மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்றாகும். இன்று இந்த பாடசாலையானது பின்தங்கிய நிலையில் உள்ளது. இவற்றினை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையவேண்டும்; என தெரிவித்தார்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago