Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 மார்ச் 03 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
கடந்த 30 வருட கால யுத்ததின் போது நேரடியாக யுத்தத்தில் பங்கேற்காத முஸ்லிம் சமூகம் அநியாயமாக இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
காத்தான்குடியில் பள்ளிவாயல்களில் 100க்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டதும், அளிஞ்சிப் பொத்தானை போன்ற இடங்களில் இனச்சுத்திகரிப்பு செய்தது மட்டுமல்லாமல், கிழக்கலே 35 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர் அதேபோல் வடக்கில் இருந்தும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
அவர் மேலும் இவ் விடயம் தொடர்பாக கூறுகையில்,
1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி கல்முனையில் இருந்து காத்தான்குடி நோக்கி வந்து கொண்டிருந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை குருக்கள்மடம் எனுமிடத்தில்; கடத்திக் கொலை செய்யப்பட்டு அவர்கள் குருக்கள்மட கடல் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் புதைக்கப்பட்டனர்.
அதனை ஊர்ஜிதப்படுத்தி இதற்கான முறைப்பாடுகள் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அதனைத் தொர்;ந்து அந்த ஆணைக்குழு சடலங்கள் புதைக்கப்பட்டதாக சொல்லப்படும் இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்தது.
இதனைத் தொடர்ந்து பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டும் இது வரையில் அந்த புதைகுழிகள் தோன்டுவதற்குரிய ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் முடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இருந்தாலும் இந்த புதைகுழிகளை தோண்டுவதற்கான செலவு கிட்டத்தட்ட 94 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டு இந்த நிதி அரசினால் ஒதுக்கீடு செய்யப்படாமையினால் இவ்விடயம் பிற்போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இருந்தாலும் சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்டுவதற்கென்று உருவாக்கப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியிலும் இதற்கான ஒரு நியாயம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லையென்றால் இந்த ஆட்சி மாற்றத்திற்கு அரப்பணிப்புடன் பங்காற்றிய ஒரு சமூகம் நீதி தேவதையின் முன் புறந்தள்ளப்பட்டதாக ஆகிவிடும்.
இதற்கான நடவடிக்கைள் மிக விரைவாக எடுக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கு கடிதம் மூலம் தாம் கேட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் இந்த அநியாயத்திற்கான நீதியையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினையும் அரசு கொடுக்க வேண்டிய கடமைப்பாடு மட்டுமல்லாது இதனோடு சம்மந்தப்பட்டவர்களையும் விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களுடைய உறவுகள் அங்கலாய்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்கள் மீதான இந்த இனப்படுகொலைகள் சரியான முறையில் விசாரிக்கப்படுவதற்காக ஒரு சுயாதீன ஆணைக்குழுவினை நியமித்து தீர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது, முஸ்லிம்களும் ஒரு தரப்;பாக இத்தீர்வுத்திட்டத்தில் அங்கம் பெறவேண்டும். இந்த விடயத்தில் சர்வதேசமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்கின்றது.
இவ்வாறான நல்ல முன்னெடுப்புக்களினூடாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சரியான ஓர் தீர்வு திட்டம் வழங்கப்பட்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago