Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மார்ச் 03 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
முகாமைத்துவ உதவியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சம்மந்தப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா உறுதியளித்துள்ளதாக அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாறக் செவ்வாய்க்கிழமை (3) தெரிவித்தார்.
அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவொன்று தமிழர் விடுதலை கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜாவை சந்தித்து பலகோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்த போதே நாடாளுமன்ற இவ்வாறு உறுதிமொழி வழங்கினார்.
அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த, 2013 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட முகாமைத்துவ தவிசாளர் சேவைப் பிரமாணக் குறிப்பின் ஊடாக முகாமைத்துவ உதவியாளர்கள் பல்வேறு வகையான பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர்.
2004.01.01ஆம் திகதிமுதல் 2013.04.01ஆம் திகதி வரைக்குமிடையேயான காலப்பகுதியில் பழையசேவைப் பிரமாணக் குறிப்பின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் 2013.04.02ம் திகதிக்குபின் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்குமிடையே சேவை மூப்பு முரண்பாடு தோன்றியுள்ளமை, 2013.04.02ம் திகதியில் தமது சேவைக்காலத்தில் 10, 11, 12, 13, 14,வருடங்களை நிறைவு செய்த அனைவருக்கும் ஒரே திகதியில் பதவி உயர்வு வழங்கப்பட்டு அவர்களிடையேயும் சேவை மூப்பு முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டமை,
பரீட்சை மூலமான பதவி உயர்வுகளை இல்லாமல் செய்து அலுவலக நிருவாகம், தாபன விதிக்கோவை, நிதிப்பரமாணம் என்பவற்றை கற்று திறமையுள்ளவர்கள் விரைவாக பதவி உயர்வினை பெற்று நல்லதொரு அலுவலக நிருவாகம் ஏற்படுவதனை தடை செய்து முகாமைத்துவ உதவியாளர்கள் சேவையில் இருந்த ஊக்குவிப்பு இல்லாமல் செய்யப்பட்டமை,
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் அதி சிறப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெறுவதற்கான தகமைகள் குழப்பப்பட்டுள்ளமை, தரம் iiஐ சேரந்த உத்தியோகத்தர்களுக்கு வினைத்தடை தாண்டல் பரீட்சை ஒன்றினை புதிதாக அறிமுகம் செய்து உழைத்து களைத்துப்போன வயதான அனுபவசாலிகள் ஓய்வூதியம் பெற்றுச் செல்லவுள்ளவேளையில் மேலும் ஒரு பரீட்சை எழுத கட்டாயப்படுத்தப்பட்மை போன்றன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான கடமைப் பொறுப்புக்கள் வேறு சேவையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன் து சம்பந்தமாக வர்த்தமானி அறிவித்தல்கள், சுற்றுநிருபங்கள் என்பனவற்றை முறையாக நடைமுறைப்படுத்த சில அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டது.
நிலைமைகளை நன்கு விளங்கி ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சேவைப் பிரமாணக் குறிப்பின் மீதான பிரச்சனைகளை பொதுநிர்வாக அமைச்சுடன் தொடர்பு கொண்டு தீர்வினைபெற்றுத் தருவதாகவும் கிழக்கு மாகாண பிரச்சனைகளை உடனடியாக கிழக்குமாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார்.
தொழிற் சங்கதலைவர் ஏ.ஜீ.முபாறக் தலைமையில் சென்ற குழுவில் திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் எஸ்.ஏ.சில்வஸ்டர், பிரதம முகாமைத்தவ உதவியாளளர் எம்.ஏ.,ஸ்மாலெவ்வை உட்பட பத்துப் பேர் சென்றிருந்தனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago