2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விசேட தேவையுடையவர்களுக்கான அணுமுறையை ஏற்படுத்துமாறு விழிப்புணர்வு

Princiya Dixci   / 2015 மார்ச் 03 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மததுல்லா

விசேட தேவையுடையவர்கள் தமது கடமைகளையும், தேவைகளையும் தடங்கலின்றி அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் சென்று மேற்கொள்ளும் வகையில் உட்பிரவேசிப்பு அணுகுமுறை வசதிகளை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (03) அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

விசேட தேவையுடையவர்களுக்கான அம்பாறை மாவட்ட வலையமைப்பின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று வலுவிழந்தோருக்கான செயலணிக்குழுவினால் இது ஏற்பாடு செய்யப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூகசேவைப் பிரிவின் கணிப்பீட்டின் பிரகாரம் இவ்வெல்லைக்குட்பட்ட 67 நிறுவனங்களில் 07 நிறுவனங்களிலும் 26 பாடசாலைகளில் 03 பாடசாலைகளிலும் விசேட தேவையுடையோர் சென்று வருவதற்கான உட்பிரவேசிப்பு அணுமுறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சமூக சேவை பதில் அதிகாரி எம்.எச். சியாத் இதன்போது தெரிவித்தார்.

2006.10.17ஆம் திகதியன்று வெளிவந்த 1467/15 என்ற இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இவ்விடயம் மக்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அரச, தனியார் அனைத்துக் கட்டங்களும் விசேட தேவையுடையவர்கள் பிரவேசிக்கக் கூடியவாறு நிர்மாணிக்கப்படுதல் அவசியமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தனியார் மற்றும் அரச வங்கிகள், தேசிய நீர்வழங்கல் சபையின் அக்கரைப்பற்று பிரதான காரியாலயம் ஆகியவற்றின் விசேட தேவையுடையோர் சகிதம் சென்று அணுகுமுறை வசதியின் அவசியம் பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன் அது தொடர்பான மகஜர் மற்றும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி விசேட தேவையுடையவர்களுக்கான வசதியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக நிறுவனங்களின் உயதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் உளமருத்துவ சக பணிப்பாளர் எம்.ஐ.ஹைதர், அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் மற்றும் சமூக சேவை பதில் கடமை அதிகாரி எம்.எச்.சியாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X