2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காணாமல் போனோர் தொடர்பில் முறையிடுமாறு அறிவுறுத்தல்

Kogilavani   / 2015 மார்ச் 06 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் காணாமல் போனோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்களை தாம் பெற்றறுவருவதாகவும் இவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், தொடர்பில் முறைப்பாடுகளை செய்யாதவர்கள் அது தொடர்பில் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும். அதனை தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் கிளைக் காரியாலயத்தில் தெரியப்படுத்தவும்.

கடந்த யுத்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் பலர் கடத்தப்பட்டும், காணாமல் போயுமுள்ளனர். சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்;. இவர்கள் தொடர்பான முறையான எந்த நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளமை அறிய முடிகின்றது.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்கு எமது திருக்கோவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரியாலயம் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் எவ்விதமான பயமும், தயக்கமுமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துவிட்டு எமது காரியாலயத்துக்கு வந்து தெரியப்படுத்த முடியும்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X