2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்தொகை

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்திகேசு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தீவுக்காலை கிராமத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ. கலையரசனின் நிதியொதுக்கீட்டின் கீழ், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்தொகைக்கான காசோலைகளை வெள்ளிக்கிழமை (06) ரீ. கலையரசன் வழங்கி வைத்தார்.

இதன்போது ஒவ்வொருவருக்கும், வாழ்வாதார உதவி தொகையாக தலா 5,000 ரூபாய் வழங்கி வைக்கப்பட்டதுடன் இக்குடும்பங்களில் கல்விகற்கும்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் வீ. ஜெகதீஸன், கே. பிரகாஸ் உட்பட பலர்; கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X