2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, அக்கரைப்பற்று அம்பாறை வீதி 3ஆம் கட்டை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  துப்பாக்கி ஒன்றை வெள்ளிக்கிழமை (06) மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம் ஜெமில் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த வயல் பிரதேசத்தில்; மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X