2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அக்கரைப்பற்று- அளிக்கம்பைக்கான புதிய பஸ் சேவை ஆரம்பம்

Thipaan   / 2015 மார்ச் 07 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று சாலையின் அக்கரைப்பற்று- அளிக்கம்பைக்கான புதிய பஸ் சேவையை நீர்ப்பாசன மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அனோமா கமகே, இன்று சனிக்கிழமை(07) ஆரம்பித்து வைத்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அளிக்கம்பை கிராமமானது வனக்குறவர்கள் வாழ்ந்து வரும் மிகவும் பழமை வாய்ந்ததொரு கிராமமாகும்.

இங்கு சுமார் 250 வனக்குறவர் குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் ஆயிரக்கணக்கான விவசாயக்காணிகளும் அமைப்பெற்றுள்ளது.

இக்கிராமத்துக்கான பஸ் போக்குவரத்து இன்மையால் இப்பிரதேச மக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த போக்குவரத்துப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X