2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வீதியை செப்பனிட்டு தருமாறு மக்கள் விசனம்

Thipaan   / 2015 மார்ச் 07 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதான வீதி நீண்ட காலமாக சேதமுற்றுள்ளதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஒலுவிலிருந்து அம்பாறை மற்றும் தீகவாபி ஆகிய நகரங்களுக்கு செல்லும்  இவ் வீதி பாரிய அளவில் சேதமுற்று காணப்படுவதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆற்று நீர் வீதியை அரிப்பதால் வீதியின் மருங்கு சேதமுற்று பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் பாரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ் வீதியால் நாளாந்தம் பாடசாலை மாணவர்களுக்கான பஸ் சேவை இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் வீதியை செப்பனிட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X