2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் விஷேட சந்திப்பு

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான விஷேட சந்திப்புக்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தற்போது மேற்கொண்டு வருகின்றது.

இதன்முதற்கட்ட சந்திப்புகள்  கல்குடா, கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றன.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் எம்.ஆர்.நஜா மொஹமட், தேசிய அமைப்பாளர் எஸ்.எச்..பிர்தௌஸ் ஆகியோர் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது குறித்த பிரதேசங்களில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றிக்கு அமைவாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேட்பாளர்களை முன்னிறுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டன.

மேலும்,  மட்டக்களப்பு, திருகோணமலை பிரதேசங்களில் நடத்த  திட்டமிடப்பட்டுள்ள என்.எஃப்.ஜி.ஜி.யின் பிராந்திய மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில், கல்குடா, கிண்ணிய மற்றும் மூதூர் பிரதேச நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு மற்றும் அரசியற் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X