2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நெயினாகாடு, குடுவில், இறக்காமம் ஊடாக அம்பாறைக்கு புதிய பஸ் சேவை

Thipaan   / 2015 மார்ச் 08 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சம்மாந்துறை பிரதேச மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில்  நெயினாகாடு, குடுவில், இறக்காமம் ஊடாக அம்பாறை நகரிக்கு புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நெயினாகாடு குடுவில் வீதியின் நிலைமை நேற்று சனிக்கிழமை (07) நேரில் பார்வையிடப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிருடன் சம்மாந்துறை போக்குவரத்து சபை நிலையப் பொறுப்பதிகாரி எம்.தாஸிம்;;, இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் மௌலவி ஏ.எல்.ஜபீர், உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் சென்றிருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிரின் முயற்சியால் இந்த பஸ் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குடிவில் நெயினாகாடு வீதியினுடாக பஸ் சேவையினை ஆரம்பிக்க சாதக நிலைமை காணப்படுவதாகவும் வீதியில் உள்ள திருத்த வேலைகளையும் மேற்கொள்ளத் தேவையான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் கேட்டுக் கொண்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X