2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

புண்ணிய கிராம நிகழ்வு

Thipaan   / 2015 மார்ச் 08 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் நாவிதன்வெளி ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபையும் இணைந்து பிரதேச அறநெறிப் பாடசாலைகளின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தின் இவ்வருடத்துக்கான புண்ணிய கிராம நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றது.

நாவிதன்வெளி ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக ரி.கலையரசன், எம்.இராஜேஸ்வரன், பிரதேச சபை தவிசாளர் எஸ்.குணரெத்தினம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன், அம்பாரை மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் கே.விமலநாதன், நாவிதன்வெளி பிரதேச செயலக  இந்து சமய கலாசார உத்தியோகத்தர் திருமதி சுஜிவனி பாஸ்கரன் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ரி.கமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட இந்து சமய கலாசார அபிவிருத்தி உதவியாளர் எஸ்.குணநாயகம். மட்டக்களப்பு இந்து கலாசார நிலையத்தின் மாவட்ட இந்து சமய கலாசார அபிவிருத்தி உதவியாளர் திருமதி எழில்வாணி பத்மகுமார், கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.உதயகுமார், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.விஜிந்திரன் உள்ளிட்ட பொதுமக்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நாவிதன்வெளி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் விஷேட பூஜை, கோமாதா பூஜை என்பன  இடம்பெற்றதுடன், நாவிதன்வெளி விவேகானந்த மகா வித்தியாவயத்தில் மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் நடன மற்றும் கலை நிகழ்வுகளும் சமய சொற்பொழிவுகளும் இடம்பெற்றது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X