2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பெரிய நீலாவணைக் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

Gavitha   / 2015 மார்ச் 09 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய நீலாவணை கடற்கரையில் 25 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலம் பெரிய நீலாவணை, சரஸ்வதி வீதி படைமுகாமுக்கு அருகில் உள்ள கடற்கரையோரத்தில் திங்கட்கிழமை (09) காலை கரையொதுங்கியிருந்ததாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்பின்னர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சன், சடலத்தைப் பார்வையிட்டதோடு சட்ட வைத்திய பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாரை பணித்துள்ளார்.

நீல நிற டெனிம் காற்சட்டை அணிந்துள்ள இந்த ஆணின் சடலத்தில் ஆங்காங்கே காயங்கள் காணப்படுவதாகவும் இந்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எம்.டபிள்யூ. இந்துனில் தலைமையிலான பொலிஸ் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X