2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் கௌரவிப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 09 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை, கல்வி வட்டக் கல்வித்துறையில் சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ள அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை பாராட்டி கௌரவிக்கும் விழா, ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.

அட்டாளைச்சேனை கல்வி வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல்.ஏ.றசீட் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்றுச் சென்ற அதிபர்கள், கல்வி அதிகாரிகளின் கடந்த கால சேவைகள் மற்றும் கல்வித்துறைக்காக இவர்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் தொடர்பில் அதிதிகளினால் இதன்போது எடுத்துரைக்கப்பட்டன.

அத்துடன், பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசில் வழங்கி அவர்களுக்கான கௌரவமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உயர் அதிகாரிகள் மற்றும் வைத்திய அதிகாரிகள் பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X