2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மகளிர் தின நிகழ்வு

Sudharshini   / 2015 மார்ச் 09 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மகளிர் தின நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை(08) பொத்துவில் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பல்துறைகளிலும்  சாதனைப்படைத்த பெண்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், பாடசாலை மாணவிகளின் கலை, கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.

சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜஃபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.வாஸித், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான டி.கே.டி.ஹேமந்த, ஜே.ஆர். சேனாதீர, வைத்திய அத்தியட்சகர் ஏ.எம். இஸ்ஸதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X