2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மகளிர் தின நிகழ்வு

Kogilavani   / 2015 மார்ச் 09 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின்; அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்  ஞாயிற்றுக்கிழமை (8) அட்டாளைச்சேனை அல்ஜெஸீறா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

முன்னணியின் மகளிர் பிரிவு மாவட்டத் தலைவியும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான எ.எம்.அபிழா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வை, முன்னணியின் மாவட்ட தலைவரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீத், ஆசிரிய ஆலோசகர் மௌலவி யு.எம்.நியாஸ், மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, கலாபூஷணம் ஆசுகவி அனபடீன், கவிஞர் பாலமுனை பாறூக், பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.அப்துல் மலிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்N;றாருக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை   அதிதிகள் வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X