2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது

Gavitha   / 2015 மார்ச் 09 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய நீலாவணை கடற்கரையில் இன்று திங்கட்கிழமை (09) காலை கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் பாண்டிருப்பு மாரியம்மன் கோயில் வீதியில் வசித்து வந்த அரரெட்ணம் சாந்தகுமார் (வயது 41) என்பவரது சடலம் என்று அவரது மனைவி தயாநிதி பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் அடிக்கடி வலிப்பு நோயால் அவஸ்தைக்குள்ளாகுபவர் எனவும் சற்று புத்தி பேதலித்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு காணாமல் போயிருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எம்.டபிள்யூ. இந்துனில் தலைமையிலான பொலிஸ் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X