2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ரண்விம காணி உறுதி வழங்கல் நிகழ்வு

Princiya Dixci   / 2015 மார்ச் 09 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சிக்கான அரசாங்கத்தை எதிர்காலத்தில் மேலும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன, திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.

அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் ரண்விம காணி உறுதி வழங்கும் வைபவம் அம்பாறை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த அரசாங்கத்தில் நீண்ட காலமாக கிராமிய மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு 100 நாட்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாகவும் சிறந்த முறையிலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஆட்சியில் அரசாங்க ஊழியர்கள் அடக்கி ஆளப்பட்டார்கள். மைத்திரி ஆட்சியில் அரசாங்க ஊழியர்கள் அவர்களது கடமையை வழங்குவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X