2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அக்கரைப்பற்று நகரில் உணவகங்கள் சுற்றிவளைப்பு

Gavitha   / 2015 மார்ச் 08 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகள், சனிக்கிழமை (07) பொது சுகாதார பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலத்தின் தலைமையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, 24 உணவகங்களும் 13 பலசரக்கு கடைகளும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, சுகாதாரமற்ற முறையில் உணவுகளை வைத்திருந்தமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்தல் என்பனவற்றின் அடிப்படையில் நான்கு உணவகங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.

இந்த உணவகங்களின் நடத்துநர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் தெரிவித்தார்.

மேலும் இதன்போது மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டதுடன், அவைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X