2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பலசரக்கு கடை எரிந்து நாசம்

Sudharshini   / 2015 மார்ச் 15 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

சாய்ந்தமருது கல்யாண வீதி, ஜமாஹிரியா சந்தியில் உள்ள பலசரக்கு கடையில் ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அக்கடையின் மேல் இரண்டு தளங்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடையிலிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு இது குறித்து அறிவித்தும், எவ்வித நடவடிக்கைகளையும் அப்பிரிவினர் மேற்கொள்ளவில்லை எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை மாநகரசபை ஆணையாளரை தொடர்பு கொண்டு வினவியபோது,

குறித்த தீ விபத்து தொடர்பாக தனக்கு காலை 6.30 மணிக்குப் பின்னரே தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தமது உத்தியோகஸ்தர் ஒருவரை ஸ்தலத்துக்கு அனுப்பி அவரிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொண்டேன்  என்றார்.

கல்முனை மாநர சபையிலுள்ள தீயணைப்புப் பிரிவுக்கு அண்மையில் 12 நிரந்தர உத்யோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X