2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

முதலைக்கடிக்கு இலக்காகி சிறுவன் பலி

Gavitha   / 2015 மார்ச் 15 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பானம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், கிம்புலுவல எனும் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன்,  முதலைக்கடிக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானதாக, பானம பொலிஸார் தெரிவித்தனர்..

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.தில்ஷான் (வயது 14) எனும் சிறுவனே இவ்வாறு முதலைக்கடிக்கு இலக்காகி பலியாகியுள்ளான். தற்போது சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகின்றது. மழைக்காலங்களில் குறித்த ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆற்றில் பொதுமக்கள் நீராடுவது முண்டு. ஆனால் இதனால் எவ்வித உயிரிழப்பும் இடம்பெற்றிருக்கவில்லை. இதுவே முதல் தடவை என்று என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளையும் முதலைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு தக்க நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X