2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சேதனப்பசளை தயாரிப்புத் திட்டத்தை ஊக்குவித்தல்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 16 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்டத்தின்  திருக்கோவில் பிரதேச சபை மேற்கொண்டுவரும் சேதனப்பசளை தயாரிப்புத்திட்டத்துக்கு  வீட்டுக் கழிவுகளை சேகரிப்பதற்காக  பிளாஸ்டிக் வாளிகள் திருக்கோவில் பிரதேச சபையால் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வாளிகள் வழங்கும் நிகழ்வு, தம்பிலுவில் - 02 மேற்கு கிராம அபிவிருத்தி சங்கக் கட்டடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது,  10 இலட்சம்  ரூபாய் பெறுமதியான பிளாஸ்டிக் வாளிகள் 2,100 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன்,  முதற்கட்டமாக 700 குடும்பங்களுக்கு வாளிகள் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் வி.புவிதராஜனால்  வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கிராம சேவகர் எஸ்.பார்த்தீபன்,  அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கே.கணேஸ் உள்ளிட்ட பலர்க கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X