Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மார்ச் 16 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதனால் குளத்தின் பாதுகாப்பு கருதி அவசரகால வான்கதவுகள் இன்று திங்கட்கிழமை (16) திறக்கப்பட்டு, மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது என நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் தெரிவித்தது.
110 அடி உயர நீர்கொள்ளவு (770,000 ஏக்கர் அடி) கொள்ளக்கூடிய சேனநாயக்க சமுத்திரத்தில் தற்போது 109.25 அடி நீர் நிறைந்துள்ளதோடு, நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதினால் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
இதனால் குளத்தின் பாதுகாப்பு கருதி மேலதிக நீரை வெளியேற்றும் பாதுகாப்பு வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டு வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கடந்த வருட பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 35 அடி மாத்திமே இருந்ததோடு, பருவ மழையும் உரிய நேரத்தில் பெய்யாது கடும் வரட்சி நிலவியதனால் பெரும்போக நெற்செய்கைக்குக் கூட நீர் போதாத ஏற்பட்டிருந்தது.
இதனால், பெரும்போக நெற்செய்கை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டதோடு, சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்படலாம் என விவசாயிகள் அச்சமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago