Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 16 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
சம்மாந்துறையின் அபிவிருத்திப்பணிகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாஹிர் பவுன்டேசன் தலைவர் வை.வீ.சலீம் தலைமையில் நேற்று (15) மாலை நடைபெற்றது.
உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஏ.எம்.ஏ.அஸீஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரீ.எம்.இஸ்மாயில், அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேசத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் ஐ.எல்.எம். மாஹிரை நடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை கிராம மட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிதிகளினால் முன் வைக்கப்பட்டது.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago