2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கல்முனை கடற்கரைப்பள்ளியின் கொடியேற்ற விழா

Thipaan   / 2015 மார்ச் 16 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவில் வருடாந்தம் நடைபெறும் நானிலம் போற்றும் சங்கை மகான் சற்குணம் குடி கொண்ட நாகூர் சாஹுல் ஹமீது வலி நாயகத்தின் 193ஆவது கொடியேற்ற விழா, இம்மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு கடக்கரைப் பள்ளி வாசல் தற்போது புனரமைக்க்பட்டு வருவதோடு, இப் பள்ளி வாசலை அண்டிய கடற்கரைப் பிரதேசம் சிரமதானம் செய்யப்பட்டு வருகின்றது.

வழமை போல் இம்முறையும் முன்கூட்டியே கடைகளுக்குரிய நிலங்கள் யாவும் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
இவ்விழா தொடர்ந்து பன்னிரெண்டு நாட்கள் இடம்பெறும் இறுதி நாளன்று இடம்பெறும் மாபெரும் அன்னதானம் வழங்கும் வைபவத்துடன் இனிதே நிறைவடையும்.                

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X