2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சிவில் பாதுகாப்பு படையின் முன்னாள் வீரருக்கு மரணதண்டனை

Kanagaraj   / 2015 மார்ச் 17 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருவரை கொலை செய்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சிவில் பாதுகாப்பு படையின் முன்னாள் வீரருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மஹஓய பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு படைவீரராக கடமையாற்றும் போது கடமைகளுக்கா வழங்கப்பட்ட ரி-56 துப்பாக்கியை பயன்படுத்தி, 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதியன்று விமான மற்றும் இராணுவ வீரர்கள் இருவரை கொலை செய்தமை மற்றும் மற்றொருவரை கடும் காயத்துக்கு உள்ளாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளே இவர் மீது சுமத்தப்ட்டிருந்தது.

அக்குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சிவில் பாதுகாப்பு வீரருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம், திங்கட்கிழமை(16) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X